ஒரு டெல்டா விவசாயியின் பொங்கல் வாழ்த்துப்பா:
குறுவை, சம்பா, தாளடி எல்லாம்
பொய்த்துப் போன
நிலையிலும்
நான் கூவுவேன் 'ஹாப்பி பொங்கல்'.
பொங்கல் பானையில போடக் கூட
அரிசி இல்லாத கொடுமையிலும்
நான் உரைப்பேன் 'ஹாப்பி
பொங்கல்'
போர்வெல் இருந்தாலும் கரண்ட் இல்லாமல்
கையைப் பிசைந்து நிற்கும் நிலையிலும்
நான் கர்ஜிப்பேன் 'ஹாப்பி பொங்கல்'.
கேரளாவுக்கு தினக்கூலியாப் போகும் போதும்
ஞான் பறையும் 'ஹோப்பி பொங்கல்'.
அமைச்சர்கள் குழு வந்து பார்த்திருக்கு
நிவாரணத்தை எதிர்நோக்கி என் காஞ்ச
வயல் காத்திருக்கு
ஆகவே நான் செப்புவேன் 'ஹாப்பி பொங்கல்'
காவிரி ஆறுல வரலைனா என்ன ?
டாஸ்மாக்ல பாருல வருதுடா தண்ணி.
அதனால
நான் 'சத்தமாச் சலம்புவேன்'.
'ஹாப்பியோ ஹாப்பி பொங்கல்
டு ஆல் டமிலன்ஸ்!'
