Friday, February 26, 2010

உறங்க மறுப்பவனும் உறக்கம் தொலைத்தவனும்...

ஒரு நாள் நடுஇரவில் உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் உறக்கம் வரவில்லை. எண்ணங்கள் அனைத்தும் ஒரு சேரக் கிளம்பி என் மீது விழுந்து அழுத்த ஆரம்பித்தன. தூக்கம் தொலைத்த இரவுகள் அனைத்தும் என் ஆழ்மனத்தின் வேதனைகளைக் கிளறி விடுகின்றன. காலை எழும்போது நம் கவலைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்கிற எண்ணமே பலரை இரவில் நிம்மதியாக உறங்க வைக்கிறது. ஆனால் நடுஇரவில் எழுந்துகொள்பவன் வேதனை சொல்லில் அடங்காததாக இருக்கிறது. கவனத்தை திசை திருப்புவதற்காக வேறு ஏதேனும் யோசிக்க முயற்சித்தேன். தூக்கம் குறித்தே நினைவலைகள் சுழன்றன. தூக்கம் ஏன் இவ்வளவு அவசியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது? தூக்கம் ஏன் ஒரு கரும்பூதம் போல நம்மை அணைத்துக்கொண்டு விடுகிறது? தூக்கம் தொலைத்தவன் உலகம் ஏன் இத்தனை வலி நிரம்பியதாக இருக்கிறது? உறங்க மறுப்பவனும் உறக்கம் தொலைத்தவனும் ஒன்றா? எனப் பல்வேறு கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டிருந்தன. தோற்றுப்போனவன் மனதில் இருந்து பீறிடும் துக்கம் போல, விழித்துக்கொண்டவன் மனதில் இருந்து கேள்விகள் பீறிடுவதேன்?

பாதியில் கலைந்த உறக்கத்தை தொடர்வது ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது? எப்படியாவது உறங்க வேண்டும் என்று வலிந்து முயன்றால் துர்சொப்பனங்கள் நுரைக்கின்றன. விழித்திருந்த படியே இரவைக்
கவனிக்கத் துவங்கினேன். விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது என்கிற வாக்கியத்தை எங்கோ கேட்டிருக்கிறேன்.

தஸ்தோயவ்ஸ்கியின் வெள்ளை இரவுகளில் வரும் கனவுலகவாசி நினைவுக்கு வந்தான். உலகில் எந்த பெண்ணும் என்னை நேசிக்கவில்லை என்று புலம்புவனாக அவன் இருக்கிறான். அவனைப் போலவே அழுத்தும் கொடுந்தனிமையை பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாதவனாக சில நாட்களுக்கு முன்பு உறங்க மறுப்பவனாக இருந்தேன். தற்போது பிரிவின் துயரத்தையும், காரணமற்ற துக்கத்தையும் சுமந்துகொண்டு உறக்கம் தொலைத்தவனாக இருக்கிறேன். உறக்கம் தொலைத்தவனுக்கு இரவு என்பது இயற்கையின் ஒரு அங்கம் என்பது மறந்து போய்விடுகிறது. அதிலும் பின்னிரவுகள் எப்போதுமே ஒரு தனி அழகைக் கொண்டிருக்கின்றன. இரவோடு ஒரு உயிரோட்டமான நெருக்கம் வந்து விடுகிறது. இரவு என் அந்தரங்கங்களின் தோழனாக இருக்கிறது. என் தனிமையும், இனிய நினைவுகளும், வேதனைகளும் என் எண்ணிக்கையற்ற இரவுகளுடன் பின்னப்பட்டிருக்கின்றன.

6 comments:

Davi said...

Orey...gentleman...you better engage yourself with some other things...Mmmmmm....I suggest a marriage for you may do good at this stage....

Jeyaseelan said...

Night merely doesnt mean the time when we go to bed, but rather a time unasnswered question,expections,challenges make the conscience search for the answers when we dont get sleep. May be the reason behind ur restlessness is that u dont see the things as they are or not accepting the sudden changes that u dont like to go with or the passion for somebody(Can u guess who?)or something. Just watch ur thoughts as watchman(dont pay too much atention) and find the flow and there must be a core cause. Then analyse and try to solve the problem.... If already you know the problem and the cause,then noone can help except u.....Do I really mean something to u? Do u know "Love cures all pains , but thers is no medicine for the pain caused by love"! Hope u get good sleep before u write ur next blog!

எண்குணத்தான் said...

ஐயா, என் இனமே!. அழ்ந்த யோசனைக்கு பிறகு அறிந்தது இது தான்.
அனைத்துக்கும் காரணகர்த்தா நாமே!

ஜான் said...

தற்ச்சமயம் என் பூமி தாறுமாறாக சுற்றுகிறது, சூரிய உதயத்தை பார்த்து சில வருடங்கள் ஆகிவிட்டன. நள்ளிரவு தூக்கத்தின் சுகம் மறந்து விட்டது. நீங்கள் சொல்வதை உணர கூட நான் நான்கைந்து ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும். ஆனாலும் தூக்கம் கலைந்து விட்டத்தை பார்த்து பொழுதை போக்கிய ஞாபகங்கள் நிறைய உண்டு.

நீங்கள் சொல்லும் வெள்ளை இரவுகள், saawariya படத்தின் மூல நாவலான white nights இரண்டும் ஒன்றா? ஒரு சிறிய சந்தேகம்.

Bala Venkatraman said...

Yes Comrade,
The same "White Nights" of Fyodar Dastavskey. Not only that dear, let me give you the complete list.
Le notti bianche, a Italian film

Chhalia, Hindi film.

Four Nights of a Dreamer, a French film

Iyarkai, a Tamil film

Ahista Ahista, a Hindi film.

Saawariya, a Hindi film

Two Lovers, a American film.

ஜான் said...

இவற்றில் சில படங்களை(Ahista Ahista,இயற்கை ) நான் பார்த்ததுண்டு. ஆனால் ஆயிரக்கணக்கான முக்கோண காதல் கதைகளை பார்த்து அலுத்து விட்ட பிறகு, இந்த குறிப்பிட்ட படங்களுக்கிடையே (இவை நல்ல சினிமாவாக இருப்பினும்) ஒற்றுமை காண்பது சற்று கடினம் தான்

saawariya படத்தில் based on a novel white nights என்று போட்டதால், எழுந்தது தான் அந்த சந்தேகம்

thanks for your complete list sir.