Monday, January 14, 2013

ஹாப்பி பொங்கல்!!!!!!!!!!!


ஒரு டெல்டா விவசாயியின் பொங்கல் வாழ்த்துப்பா:



குறுவை,  சம்பா,  தாளடி  எல்லாம் 
பொய்த்துப் போன நிலையிலும்
நான் கூவுவேன் 'ஹாப்பி  பொங்கல்'.

பொங்கல்  பானையில போடக் கூட 
அரிசி இல்லாத  கொடுமையிலும் 
நான் உரைப்பேன்  'ஹாப்பி பொங்கல்' 

போர்வெல் இருந்தாலும் கரண்ட் இல்லாமல்
கையைப் பிசைந்து நிற்கும் நிலையிலும்
நான் கர்ஜிப்பேன் 'ஹாப்பி  பொங்கல்'.

வாங்கின கடனுக்கு வட்டி கட்ட  
கேரளாவுக்கு தினக்கூலியாப் போகும் போதும் 
ஞான்  பறையும்  'ஹோப்பி பொங்கல்'.

அமைச்சர்கள் குழு வந்து பார்த்திருக்கு
நிவாரணத்தை எதிர்நோக்கி என் காஞ்ச வயல் காத்திருக்கு
ஆகவே நான் செப்புவேன் 'ஹாப்பி பொங்கல்' 

காவிரி ஆறுல வரலைனா என்ன ?
டாஸ்மாக்ல பாருல வருதுடா தண்ணி.
அதனால நான் 'சத்தமாச் சலம்புவேன்'.
'ஹாப்பியோ  ஹாப்பி  பொங்கல் டு ஆல் டமிலன்ஸ்!'



3 comments:

ஓஜஸ் said...

நிதர்சனத்தை நாம் அறிய வேண்டும். விவசாயிகள் மற்றும் தமிழை நாம் மதிக்காது, மிதிப்பது பெரும் குற்றம், என்பதை நச்சுனு சொல்லிடீங்க. [இந்த பாவின் வெள்ளோட்டதை எனக்கு காண்பித்தமைகும் நன்றிகள்.]

தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.

நாற்சந்தி ஓஜஸ்

Bhargavisri Gurunathan said...

என்று தான் விவசாயின் குமுறலுக்கு விடை கிடைக்குமோ...

தமிழ் said...

வழக்கமாக பலரும் Happy Pongal தான் சொல்றாங்க....
பலதரப்பட்ட குமுறல்களையும் தன்னகத்தே அடக்கிய பாட்டு....

நிறைய சொல்ல தேவையிருக்காது...
நாம மாறிமாறி சொன்னாலும் நடக்கிறதுதான் நடக்கும்...

ஒரே நல்ல விடயம்.....இந்த வருடம்/இந்த மாதம் 3 பதிவுகள் தொடர்ச்சியா எழுதீருக்கீங்க.
வாழ்த்துகள் சார்!
தொடர்க....இதுபோல்.