Saturday, June 6, 2009

கவனிப்பாரற்றுக் கிடந்த என் Inbox

உடல்நிலை சரியில்லாததால் சில நாட்கள் அலுவலகம் செல்லாமலிருந்தேன். பணிக்கு திரும்பியவுடன் என் மின்னஞ்சல் முகவரிக்கு ஏதேனும் கடிதங்கள் வந்துள்ளனவா என்று பார்க்க செய்திப்பெட்டியை திறந்து பார்த்தேன். மூன்று நாட்களாக எந்த புதிய மின்னஞ்சல்களும் வரவில்லை. இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு ஜீவராசிக்கும் மூன்று நாட்களாக என் குறித்த எண்ணம் வரவில்லை என்ற நினைப்பே தொண்டையில் வலி உண்டாக்கியது. சிறிது நேரம் கழிந்த பின்பே இதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்ற தெளிவு பிறந்தது. இணயம் ஏன் இவ்வளவு தூரம் என்னை அடிமையாக ஆக்கிவிடுகிறது என்று யோசித்தேன். அலைபேசிகளும் இணையமும் ஏன் இன்று வாழ்கையின் தவிர்க்க முடியாதனவாக மாறிவிட்டன என்று எண்ணும் போது வியப்பாக இருந்தது. இணயம் தன் மாயப் புல்லாங்குழலை எந்நேரமும் இசைத்துக்கொண்டு இருக்கிறது. பேக்பைப்பர் பின்னால் செல்லும் எலிகளை போல நான் இணயத்தின் பின்னால் ஓடுகிறேன். அந்த மயக்கம் விசித்திரமானது. தன்னுடைய கம்பீரம் மறந்து தெருவில் யாசகம் கேட்கும் கோவில்யானை போல என்னை இணயம் மாற்றி இருக்கிறது என்பதே நிஜம்.

8 comments:

Ashok Krishnamoorthy said...

Agreed completely... I'm questioning myself... In past 4-5 years, was there a day without a computer?

Muruganantham Durairaj said...

Bitter fact.

Me too facing this.

Suresh said...

சார் நீக எங்கியோ போய்ட்டிக

Unknown said...

Fact and nice Tamil.

Unknown said...

Next GNANI is taking birth at Suriyur

Vijay Jerold said...

யானை உவமை நன்று.

Unknown said...

How you can maintain your stability?

Software Engineer said...

Sir..I copy this to my FB wall..