Friday, November 20, 2009

ஜிமெயில் ஜாக்கிரதை!


நாளுக்கு நாள் நம் ஜிமெயில் பயன்பாடு அதிகரித்துவருவது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். 2004 -லில் துவங்கப்பட்ட இச்சேவை, ஆரம்பத்தில் அழைப்புகள் (invitations) மூலமாகவே, பயனர்களை (users) சேர்த்துக்கொண்டு வந்தது. 2007 -இல் இருந்து திருவாளர் பொதுஜனம் பயன்படுத்தக் கூடிய வகையில் மாறியது. தொழில் நுட்பப் பூங்காவின் முன்னாள் இயக்குனர் மறைந்த ரா. ந. பாலசுப்ரமணியன் அவர்கள் கொடுத்த அழைப்பு மூலமே, நான் ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தத் துவங்கினேன். 2007 -இல் இருந்து தான் ஜிமெயில் தன் பீட்டா (beta என்பதற்கு சரியான தமிழ்ப் பதம் என்ன? அறிஞர் பெருமக்கள் எனக்கு உதவலாமே!) அந்தஸ்தில் இருந்து, முழுமை பெற்ற வெளியீடு (release) ஆக மாறியது. 1 GB ஆகத் துவங்கி, தற்போது 10 GB முதல் 400 GB வரை பணம் செலுத்திப் பெறலாம். நீங்கள் இப்பதிவைப் வாசித்துக்கொண்டிருக்கும் போது ஜிமெயில் பயனர்களின் எண்ணிக்கை 150 மில்லியன் ஆக இருக்கக்கூடும். ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் ஜிமெயில் கூகிள் மெயில் என்று சொல்லப்படுகிறது. ஏதோ உரிமம் (copyright) குறித்த சர்ச்சை என்று கேள்விப்பட்டேன்.

நிற்க, என் பதிவு, ஜிமெயில் - குறித்து இன்று ஒரு தகவல் - தென்கச்சி சுவாமிநாதன் போல சொல்லிக்கொண்டு போவதல்ல. என் நண்பன் ஒருவன் தன் ஜிமெயில் முகவரி யாரோ இணையத் திருடர்களால் களவாடப்பட்டது என்று சொன்னான். எவ்வளவு முயன்றும் புதிய கடவுச்சொல்லைக் கண்டு பிடிக்க இயலவில்லை என்றும் மாற்று முகவரியும் (secondary email) களவாடப்பட்டது என்றும் சொன்னான். வெகு விரைவில் பலரும் இதுபோல் சொல்லுவார்கள் என்று என்னால் கணிக்க முடிகிறது (Ragavan 's instinct). பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாது, சுலபமாய் கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. "கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?" என்கிற கேள்விக்கு விடை கண்டறிய முயற்சி செய்தால், பலவும் சாத்தியமே. "செல்லப் பெயர், படித்த பள்ளி, கைபேசியின் முதல் ஐந்து இலக்கங்கள், செல்ல நாயின் பெயர்" என்பது போன்ற கேள்விகளுக்கு சரியான பதில்களை orkut மற்றும் myspace போன்ற சமூக வலைதளங்களில் (social networks) நாம் தெளிவாக உளறி வைத்திருக்கும்போது, அவற்றைக் கொண்டு கடவுச்சொல்லை எளிதாக அனுமானம் செய்ய முடியும். தகவல் பாதுகாப்பு எங்கோ தடுமாறுகிறது!

6 comments:

amal joglo said...

Hai sir,
I read ur article it is really worth...now a days these kind of illegal activities are increasing on the web, Some of my friends also loose their mail id. so, this is the right article at the right time.
In my view, the user is the fully responsible for their security weakness in gmail, yahoo, paypal...
The user have to set the tough password and not guess by others. dont give the original personal inforamtion(date of birth, pincode, etc.,) and answer for the security question must be tough and not guess by others.
Don't use the secondary mail address vice versa, If one mail address is hacked other will also easily hacked. Use the updated antivirus in ur system, some kind of viruses may steel ur personal information...

Davi said...

But bala....for every free thing...you run the risk of losing it any time...Therefore Free = prone to risk...

Anand Balaji said...

என் சிற்றறிவிற்கு எட்டிய தகவல்....... x,y,z என்பது போல்...... ஆல்ஃபா (alpha), பீட்டா (beta), காமா (gamma) ஆகியவை கணிதத்தில் பயன்படுத்தப்படும் குறியீடுகள்.... ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்ட பிறகு அது அந்நிறுவனத்திலுள்ள மென்பொருள் பரிசோதனை (software testing) கூடத்தில் பரிசோதனை செய்யப்படும்.... அதற்கு ஆல்ஃபா டெஸ்டிங் என்று பெயர்..... அதில் தேர்ச்சி பெற்றபின்..... அது பீட்டா வெர்ஷனாக பயனர்களின் பயன்பாட்டிற்கு தரப்படும் (முன்னோட்டமாக)..... அவற்றிலும் சில குறைபாடுகள் (bugs).....இருக்கும்.... குறைபாடுகள் மற்றும் மேன்மைபடுத்த உதவும் கருத்துகளை (feedback) பயனர்களிடமிருந்து பெற்று... குறைபாடுகள் நீக்கப்பட்டு...... காமா (gamma) வெர்ஷனாக..... அதாவது.... release செய்யப்படும்........ ஆனால்.... பெரும்பாலும்..... நிறுவனங்கள் release 1.0, 2.0 என வெளியிடுகிறார்களே தவிர.... அதை காமா வெளியீடு என்று கூறுவதில்லை.....

எண்குணத்தான் said...

ஆமாம் ரொம்ப சரியாக சொன்னீர்கள். கடவுச்சொல்லை தேர்ந்துஎடுப்பதில் கவனம் தேவை.

Unknown said...

beta enbatharkku "PARISOTHANAI OTTAM" enru sollalam.

Buvana Vellaisamy said...

Hai sir,
What u r saying is absolutely right.. Tell me how to protect ourselves from those hackers.. If possible write it as a separate article in ur blog...