Sunday, April 25, 2010

தமிழன் என்றொரு இனமுண்டு....


சினிமாவுக்கு அடுத்தபடியாக வெகுஜனங்களை ஈர்த்த ஐபீஎல்(IPL) என்கிற அதி உன்னதமான நிகழ்வு தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் இந்த விளையாட்டு மோகத்தில் தன்னிலை மறந்தோர் பலர். புரளும் பணம், பலரது கவனத்திற்கும் உள்ளானதால், அரசு தற்போது அப்பணத்தை தன்வசப்படுத்த முடியுமா என்று யோசிக்கின்றது. அரசு இயந்திரம் ஏற்கனவே பல காமெடிகள் செய்திருக்கிறது. அதன் IPL அத்யாயம் ஏற்படுத்தும் புதிய காமெடிகள் என்னவென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். IPL ஸ்கோர் தெரியாதவன் ஆதிவாசிகளில் ஒருவன் என்கிற நிலையில் வேற்றுமைப்படுத்தப்பட்டு, இரவெல்லாம் கண்விழித்து மேட்ச் பார்த்து, பகலெல்லாம் அது குறித்து விவாதிக்கும் அதி புத்திசாலிகள் அதிகரித்துவிட்டனர். குடிநீர் பிரச்சினை, விஷம்போல உயரும் விலை வாசி, புவி வெப்பமயமாதல், GSLV தோல்வி என்பதெல்லாம் தாண்டி, IPL மட்டுமே பேச்சில் மையம்கொண்டிருக்கிறது.

எப்போதும் போல் சராசரித் தமிழன், தேர்தல் நேரத்தில் மட்டும், அரசின் செயல்முறைகள் குறித்து யோசித்து விட்டு, யார் அதிகப் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்து விடுகிறான். அவன் வாழ்வை நெறிப்படுத்தவும், அவன் சிந்தனைகளை மேம்பட்டதாகவும் மாற்றியமைக்க சினிமா மற்றும் IPL என்று இரு முக்கிய வாழ்வியல் முறைகள் (?!) உள்ளன என்று சொன்னால் அது மிகை ஆகாது. வாராவாரம் ஆனந்தவிகடன் பல்வேறு பிரபலங்களைப் பற்றி துணுக்குகளாக செய்திகள் தருகிறது. கமல், ரஜினி, சச்சின், அழகிரி, டோனி போன்றவர்களின் வரிசையில் அவ்வப்போது சில பிரபலமாகதவர்களும் வருவதுண்டு, மக்களின் நீடுதுயில் நீக்க மூத்திரச்சட்டியோடு தள்ளாதவயதிலும் பேசி அலைந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியார், வாழ்வே தவமென வாழ்ந்த காமராசர், உழைப்பவன் வாழ்வு மேம்பட ஊரெல்லாம் மறைந்து அலைந்து தன்வாழ்வு பாராத தோழர் ஜீவா எல்லாம் மேற்குறிப்பிட்ட உத்தமர்களுக்குப் பின்னரே. அட்டைப்படத்தில் பாவனாவும், ஒரு ஓரத்தில் ஜீவாவும் பார்க்க நேர்ந்தது இவ்வாரம். ஜீவா படம் அட்டையில் இருந்தால், ஜனசக்தி நாளிதழ் என்று நம் அருமைத் தமிழன் வாங்காமல் சென்று விடுவான். விகடனைச் சொல்லி குற்றமில்லை.

3 comments:

ஜான் said...

இந்த சொரிமுத்து (ஜீவா) கம்யூனிசம், பொதுவுடைமை என்று ஏதேதோ புரியாத மொக்கைகளை (?) பேசுகிறார். ஆனால் பாவனா அப்படியா?, அவர் எதையுமே ஒளிவு மறைவின்றி வெளிபடுத்துகிறார். நீங்களே சொல்லுங்கள் எங்களுக்கு (?) யார் முக்கியம்?


IPL பற்றிய என் முந்தய பதிவு
http://john-a-comrade.blogspot.com/2010/04/ipl.html
நேரமிருந்தால் படித்து விட்டு தங்கள் கருத்தை சொல்லவும்.

SV.Sasikumar said...

Really Great article sir,

Bala Venkatraman said...

@Jhon,
I read your blog. Wonderful thinking! Write more and more!
@Sasi,

Thanx a lot!