Wednesday, July 24, 2013

பழம் நீங்கள் அப்பா, ஞானப்பழம் நீங்கள் அப்பா ;)

மோடிக்கு விசா தரக்கூடாது என்று மடல் வரையும் மகான்களே,

பேத்தியின் பேறுகால உதவிக்குச் செல்லும் பாட்டிகளின் விசாக்கள் மறுக்கப்படுவது குறித்துக் கிஞ்சித்தேனும் கவலை கொண்டதுண்டா ?

வால்மார்ட் உள்ளே வந்தபோது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கால்மாட்டில் கடனே என உட்கார்ந்து இருந்துவிட்டு இப்போது என் இத்தனை ஆர்ப்பாட்டம் ?

அட்லாண்டாவில் நாக்கு செத்துக் கிடக்கும் நம்ம ஊர் நமச்சிவாயத்திற்கு அவன் தாய் தன் கையால் செய்த ஆவக்கா உறுகாயையும் தளி வடாத்தையும் அரிசி அப்பளாத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்காத அமெரிக்க இமிக்ரேஷன் மீது கோபம் கொண்டு தாங்கள் ஒரு கடிதம் கூட எழுதவில்லையே ஏன் ?
 

1 comment:

kamalakkannan said...


மோடிக்கு விசா வழங்க கூடாது என அமெரிக்காவிற்கு அனுப்பிய மோசடி கடிதத்தில் 6 எம்பிக்களின் கையப்பம் போலியாக போடப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது ,