Thursday, January 21, 2010

செவ்வஞ்சலி..


மறைந்த மாமனிதர், எதிர்கட்சிகள் அனைவராலும் கூட மதிக்கப்பட்ட, சுதந்திர இந்தியாவின் ஈடு இணையற்ற மக்கள் தலைவர், தோழர் ஜோதிகிரன் பாசு அவர்களுக்கு என் செவ்வஞ்சலி. 23 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த போதும் ஒரு சாமானியனைப் போலவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர் பாசு. லண்டனில் சட்டம் படித்த பாசு, அங்கேயே சிவப்புச் சிந்தனைகளால் கவரப்பட்டார். 1940 களில் தாயகம் வந்த பாசு, இந்தியாவின் கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் முழு நேர ஊழியனாகவே மாறினார். 1952 முதல் 1996 வரை நடந்த எல்லா தேர்தல்களிலும் பாசுவே வெற்றி பெற்றார்.

இந்திய முழுவதும் உள்ள தொழில் சங்கங்களின் வளர்ச்சிக்கு பாசு ஆற்றிய பணியே முழு முதற் காரணம். 1964 -ஆம் ஆண்டு, சித்தாந்த வேறுபாடுகளால், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது, அதன் பொலிட்பீரோ உறுப்பினர் ஆனார். நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட, மார்க்சிஸ்ட் காட்சியின் ஆரம்பகால 9 தலைவர்களில், பாசு மட்டுமே வெகு காலம் கட்சிக்கு தொண்டாற்றியவர்.

இந்திரா காந்தி இறந்த தருணம், நாடெங்கும் சீக்கியர்களின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, கல்கத்தாவில் ஒரு சீக்கியர் கூடத் தாக்கப்படாதவண்ணம் பாசு பாதுகாத்தார். கதராடை கட்டா காந்தியவாதியாக விளங்கியவர் பாசு. ஒரு நல்ல அரசியல்வாதி என்பதைத் தாண்டி, சிறந்த மனிதரை இழந்துவிட்டோம்.

இறந்த பின்பும் ஒரு வழிகாட்டியாகவே இருக்கிறார் பாசு. அவர் இறந்தபின்பு, கடையடைப்போ, மறியல்களோ, அசம்பாவிதங்களோ ஏற்படவில்லை. மக்கள் காசைக்கொட்டி சமாதியும் உருவாக்கவில்லை. அவர் தன் உடலை தானமாகக் கொடுத்திருக்கும் விவரமே, அவர் இறந்த பின்புதான் தெரிந்தது.

போய்வாருங்கள் தோழரே, என்றும் இருப்பீர்கள் இத்தேசத்தின் அடித்தட்டு மக்கள் மனதில்!

2 comments:

VIJI said...

உலகம் போற்றும் உன்னத மனிதனின் பதிவு!
அவரின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் எடுத்துகாட்டு. முக்கியமாக பொது வாழ்கை-யின் பெயரில் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகள் ஒரு முறையேனும் அவரது வாழ்கைப்பதிவை வாசித்துப்பார்க்கட்டும்............
பாலா சார்.... இந்த மாதிரியான இறப்பின் போது மட்டும் நினைக்கப்படும், நினைக்கப்பட்ட மனிதர்களின் பதிவை நிறைய எதிர்பார்கிறேன்...!

ஜான் said...

its looks like a small biography.
thank you sir for that.
இந்தியாவின் கடைசி பெருந்தலைவர் (அரசியல் பாகுபாடின்றி எல்லோராலும் ஏற்றுகொள்ளபடுபவர்கள்)இந்திரா காந்தி என சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் என்னை பொறுத்தவரை பாசுஜி தான் கடைசி பெருந்தலைவர்.