Tuesday, January 8, 2013

கார்த்திக் ராஜா

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வெகு நாட்களுக்குப் பிறகு கார்த்திக் ராஜாவைப் பார்க்க நேர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜா பாடல்களைக் கேட்டு வளர்ந்த ஜெனரேஷன் ஆசாமிகள் பலருக்கு கார்த்திக் ராஜாவைத் தெரியவில்லை. இவர்  ம்யுசிக் எல்லாம் கம்போஸ் பண்ணுவாரா என்று கேட்டு என்னை கதி கலங்க வைத்தார்கள். கார்த்திக் ராஜாவின் இசையில் 'அலெக்சாண்டர்' திரைப்படம்  வெளிவந்தபோது (1996) அந்தப் படத்தின் 'நதியோரம்' பாடல் மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது. மாரியம்மன் கோவில் திருவிழா மைக்செட், கல்யாண வீடுகள், பிரைவேட் பஸ்கள் எல்லாம் அந்தப் பாடலைப் பலமுறை ஒலிபரப்பி, ஒலிபரப்பி அந்தப்  பாடல் பிரபலம் ஆகியது. இப்போது யார் இவரு என்று கார்த்திக் ராஜாவைக் கேட்பவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு அலெக்ஸாண்டர்  படமும் நதியோரம் பாடலும் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம்  கார்த்திக் ராஜாவுக்கு பெரிய மவுசு இருந்தது.  பின்னர்  அவருக்கு ஏன் பெரிய வெற்றிகள் இல்லை என்பது எனக்கு இன்னமும் புரிய வில்லை.  வெகு நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு  அந்தப் பாடலை Youtube-ல் கேட்டு இன்புற்றேன். உன்னி கிருஷ்ணன் மற்றும் பவதாரிணி பாடிய பாடல். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.  Link for the Song

1 comment:

தமிழ் said...

கார்த்திக் ராஜா இப்போதும் இளையராஜாவின் ஆர்கெஸ்ட்ராவில் இருப்பதாக படித்திருக்கிறேன்.
இதுதவிர அவ்வப்போது கார்த்திக் ராஜாவிற்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
என்றொரு படத்தின் பாடல்கள் இவர் இசை அமைத்ததுதான். இன்னும் படம் வரவில்லை. யுவன் மற்றும் ராஜா இருவரும் அதில் பாடியிருக்கிறார்கள் என்பதும் சுவாரசியம்!

நான் நீங்கள் குறிப்பிட்ட பாடலைக் கேட்பது இன்னோர் நண்பரின் தயவால்தான் நடக்குமென நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்.

அடிக்கடி எழுதுங்க சார்!